அருள்மிகு நாகநாதசாமி திருக்கோயில்

ஸ்ரீ நாகநாதசாமி துணை

நாகப்பட்டிணம் மாவட்டம் மயிலாடுதுறை தாலுக்கா நாகராஜாபுரம் என்னும் பொய்கைக்குடி

அருள்மிகு நாகநாதசாமி திருக்கோயில் திருப்பணிக்காக

ஸ்ரீ நாகநாதசுசாமி நற்பணி மன்ற பத்திரிகை

ஸ்ரீ வினாயகர் துதி

ஐந்து கரத்தனை ஆனைமுகந்தனை

இந்திரன் இளம்பிறை யேனும் ஏயிற்றினை

நந்திமகன்தனை ஞானக்கொழுந்தினை

புந்தியில் வைத்தடி போற்றுவோமே!

 

மெய்யன்புடைய திருவருட் செல்வர்களே!

 

  தமிழ் திருநாட்டில் தஞ்சை,நாகை தரணியாம் சோழநாட்டிலே காவிரிநதியின் வடக்கேயும் கொள்ளிட நதியின் தெற்கேயும் பூலோகத்தில் பரமேஸ்வரனுக்கு திருமணம் நடந்த ஸ்தலமாதலால் கல்யாண தோஷங்கள் நிவர்த்தியாகி திருமணம் கை கூடும் பிரார்த்தனை ஸ்தலமாகிய திருமணஞ்சேரி ஆலயத்திற்கும் வடகிழக்கே இருகல் தொலைவில்

 

அமைந்துள்ளதும் சுட்ட வீரட்டானத்துள் ஒன்றான கொற்கை அருள்மிகு வீரட்டேஸ்வரர் ஆலயத்திற்கு மேற்கேயும் அமையபெற்றது பொய்கைக்குடி என்னும் சிற்றூராகும்.

இவ்வூரின்கண் நாகலோக நாகராஜனால் தவமியற்றி நற்பேறுபெற்றதால் இவ்வூர் நாகராசபுரம் எனவும் செல்வமும் செறிந்துள்ளதால் பொய்கைக்குடி எனவும் பெயர் பெற்று விளங்குகிறது. இங்கு கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள அ / மி.நாகநாதசாமி சமேத அ / மி. சாந்தநாயகி அம்மன் ஆலயம் ஒர்   பிரார்த்தனை ஸ்தலமாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள் இவ்வாலயத்தில் எழுந்தருளியுள்ள  வள்ளி  தெய்வசேனா சமேத ஸ்ரீ முருகபெருமானுக்கு  சித்ராபௌர்ணமியில்  கிராம மக்கள் பெருவிழா எடுத்து இஷ்டதெய்வமாக கொண்டாடி பெரும்பேறு பெற்று வருகிறார்கள். இவ்வாலயத்தின் கண் நாகதோஷமுள்ளவர்கள் பிரார்த்தனை செய்து நாகதோஷம் நீங்கபெறுவதாக ஐதிகம்! இக்கோயிலில்  சித்திரை மாதம்  2,3 தேதி களில் சூரிய பகவானின் ஒளிக்திர் நாகநாதா சுவாமி திருமேனியில்  காணலாம்!

இத்தகைய பெருமை வாய்ந்த இந்திருக்கோயில் திருகுடமுழுக்கு செய்வித்து சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டதாலும் பழுதடைந்துள்ள ராஜகோபுரம்,மண்டபங்கள்,விமானங்கள்,மதில் சுவர்கள்,பிரகாரம் தளவரிசை முதலியவைகளை திருப்பணிகள் செய்ய ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திரர் சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீவியேந்திர சுவாமிகள், ஸ்ரீலஸ்ரீ குருமகாசன்னிதானங்கள் ஆகிய பெரியோர்களின் பேராதரவு ஆசிகளாலும்,கிராமவாசிகள்,உபயதாரர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் ஒத்துழைப்பினாலும் அறநிலையத்துறை உதவியாலும், அதிகாரிகளின் நன்முயற்சியாலும்... நாளது கார்த்திகை மாதம் 19ம் தேதி 5.12.2003 வெள்ளிக்கிழமை விமானங்களுக்கு பாலஸ்தாபனம் செய்து திருப்பணிதுவக்கம் செய்யப்பட்டுள்ளது. மொத்த மதிப்பீடு ரூ.9 லட்சம்.

மேற்படி பணிகளை ஸ்ரீ நாகநாத சுவாமி நற்பணி மன்றம் மூலம் முயற்சி எடுத்து திருப்பணிகள் செய்யப்பட்டு வருவதால் மேற்படி பணிகள் சிறப்பாக பூர்த்தி செய்து குடமுழுக்கு செய்ய வேண்டியிருப்பதால் இதைகண்ணுறும் பக்தர்கள் ஆன்மீக பெருமக்கள், இறை பக்தியில் நாட்டமுள்ள சிவநேய செல்வர்கள், மெய்யன்பர்கள் தாரளமாக பொருள் உதவி வழங்கி இறையருள்  பெருமாறு வேண்டுகிறோம்.

 

                          இப்படிக்கு,

                                             அருள்மிகு. நாகநாதசுவாமி நற்பணி மன்றம்

                           மற்றும் கிராமவாசிகள்

                                           பொய்கைக்குடி.காளி(Po), மயிலாடுதுறை (TK)

 

திருப்பணிக்கு நன்கொடை அனுப்புபவர்கள் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும்

அ/மி. நாகநாதசுவாமி நற்பணி மன்றம்                  R.சிவசுப்பிரமணியன் தலைவர்

    வங்கி கணக்கு                                      அ/மி.ஸ்ரீ நாகநாத சுவாமி நற்பணி மன்றம்

இந்தியன் வங்கி,காளி                                       பொய்கைக்குடி.காளி,

சேமிப்பு கணக்கு எண் : 5576                          மயிலாடுதுறை-609 811

S.R.மோகன்,து.தலைவர் S.முத்தமிழ்ச்செல்வன் செயலாளர்,V.இராமலிங்கம் பிள்ளை,பொருளாளர்



Post a Comment

0 Comments